Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களை தவிர மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது – தமிழக மின்வாரியம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவானது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதரத்தை இழந்து நிற்பதால் தமிழக அரசு மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மின் கட்டணம் செலுத்த அவகாசம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை மின் கட்டண வசூல் நடவடிக்கைகளை தள்ளி வைக்க கோரி வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 15க்கு மேல் நீட்டிக்கப்படாது என தமிழக மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனை வழக்கில் வரும் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |