நமது நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
நமது நாட்டின் பாரம்பரிய உணவுகள் என்பதைத்தாண்டிஉடலுக்கு நன்மை தந்த சிறுதானிய உணவான கேப்பை கூழ், கம்பம், திணை வகைகள் உள்ளிட்டவை தமிழ் மக்களுக்கு நோய் வராமல் தடுத்ததோடு வந்த நோயையும் விரட்டி அடித்துள்ளது. இவற்றை உணவாக உண்டு நோயில்லாமல் வாழ்ந்த தமிழர்கள் காலம் மாறிப்போய் தற்போது இதனை நொறுக்குத் தீனி போல் சிறிதளவுகூட எடுத்துக் கொள்ளாததன் விளைவாக பல நோய்களை சம்பாதித்து வருகிறோம்.
இவற்றை உணராமல் மேலைநாட்டு பண்பாடு என்று வெவ்வேறு விதமான உணவு வகைகளை உண்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளான நாம் இனியாவது இதன் அவசியத்தை உணர்ந்து வருங்கால தலைமுறையினருக்கு சிறுதானியங்கள் குறித்த நன்மையை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வழிவகை செய்வோம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.