Categories
அரசியல் மாநில செய்திகள்

கதை இல்ல, படம் ஓடாது….. அதுக்கு தான் இப்படி பேசுறாரு விஜய்….. மீண்டும் சீண்டும் அதிமுக..!!

கதையே இல்லாத படத்தை ஓட்ட வேண்டுமென்று நடிகர் விஜய் இப்படி பேசியுள்ளார் என்று அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை விஜய் சீண்டிய விஜய் யாரை எங்கே வைக்கவேண்டுமோ அவர்களை அங்கே வைக்கவேண்டுயமென்றும் தெரிவித்தார்.

நடிகர் விஜயின் இந்த கருத்துக்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.விஜயின் கருத்து குறித்து அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் கூறும் போது , கதையே இல்லாத ஒரு திரைப்படத்தை எடுத்து இரண்டு , மூன்று மாதம்  ஓட்ட வேண்டும் என்பதற்காக , ஒரு பரப்பரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திரைப்பட விழாக்களில் பேசப்படுகிறது. தன்னுடைய திரைப்படத்தை ஓட்டுவதற்கான அரசியலை செய்து வருகிறார் நடிகர் விஜய். மக்கள் யாரை உக்கார வைக்கவேண்டுமோ அவர்களை தான் உட்கார வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |