அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அதை கட்டி காத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள். இருபெரும் தலைவர்கள். குடும்பம் கிடையாது. இங்கே இருக்கின்றவர்கள் தான் பிள்ளைகள் என்று அந்தப் பிள்ளைகளுக்காக உழைத்து மறைந்த தலைவர் நம்முடைய தலைவர்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும்… தன்னுடைய உயிர் இருக்கின்ற வரை… இந்த மண்ணில் இருக்கின்ற மக்களுக்காக உழைத்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயக்கம். அதேவேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை பாருங்கள்.
அது குடும்ப கட்சி, அது கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் யார் வேணாலும் இடம்பெறலாம். இப்போ அண்ணா திமுகவில் இருந்து சென்ற ஒரு எட்டு பேர் அந்த கம்பெனியில் டிரைக்டர் ஆகி, அமைச்சர் ஆகி இருக்கிறாங்க. அந்த கட்சியில் உழைக்கின்றவர்களுக்கு மரியாதை கிடையாது. திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப கட்சி, குடும்ப ஆதிக்கம். உதயநிதி அவர்கள் படங்களில் கோடி கோடியாய் சம்பாதிசு கிட்டு இருக்காரு. ஏன்னா படத்துல நடிச்சு… சம்பாதிச்சா தான் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற முடியும் என விமர்சனம் செய்தார்.