Categories
தேசிய செய்திகள்

ஜூன் 30ம் தேதி வரை எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை: உத்தரபிரதேச அரசு உத்தரவு..!

ஜூன் 30 வரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நிலைமையைப் பொறுத்து மேலும் சில முடிவு எடுக்கப்படும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 32வது நாளாக அமலில் உள்ளது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், அனைத்து மாநில அரசுகளும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஜூன் 30ம் தேதி வரை எந்த ஒரு பொது கூட்டமும் நடத்த அனுமதி இல்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதேபோல புனித ரம்ஜான் மாதம் துவங்குவதால் மக்களை வீட்டில் இருந்தவாறு பிரார்த்தனை செய்யும்படி முதல்வரின் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ரம்ஜான் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அனைத்து மதத் தலைவர்களும் வீட்டிலேயே தங்கி நமாஸ் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளதால் எங்கும் எந்த பொதுக்கூட்டமும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும், ”என்று முதல்வரின் அலுவலகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 1,621 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 247 பேர் குணமடைந்துள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |