ராமநாதபுரத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக 2 டிராக்டரில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தீபக் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் அக்காள்மடம் பகுதியை சேர்ந்த கதிரவன், பலசாமி, சுகன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்த போலீசார் மணலுடன் இருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.