சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் செல்லும் கடைகள் திறக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரகப்பகுதிகளில் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடித்து சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முடிதிருத்துபவர்கள் கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அவர் கெட்கொண்டுள்ளார். முடித்திருந்த வருபவர்களும் முகக்கவசத்துடன் சலூன்களுக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த அனுமதி சென்னைக்கு பொருந்தாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு தளர்வுகள் குறித்து வழிநெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு மாநில அரசுகள் பாதிப்புகளின் அடிப்படையில் தளர்வுகளை வழங்கலாம் என தெரிவித்திருந்தது. மேலும், நேற்று தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்ட போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களை தவிர்த்து பிற 25 மாவட்டங்களில் சில ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டது.
அதில் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயங்கலாம். 100 பேர் அல்லது அதற்கு கீழ் பணியாளர்களை கொண்ட தொழில் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் சென்னையை தவிர்த்து நாளை முதல் அனைத்து ஊரக பகுதிகளிலும் சலூன்கள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.