Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர்களுக்கு NO…. ஒருத்தரும் தப்பக்கூடாது… ஓ.பி.எஸ் எடுத்த செம முடிவு…!!

11 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் யாரை நியமிப்பது தொடர்பாக ஓ.பி.எஸ் அதிரடியான முடிவினை எடுத்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது தொடர்பாக எழுந்து வந்த குழப்பத்தை அடுத்து நேற்று காலை தொடங்கிய ஆலோசனை மாலை வரை நீடித்தது. இரவு 10.30  மணிக்கும் ஆலோசனை நடந்தது. 12 மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை என்பது மாறி மாறி முதலமைச்சர் வீட்டிலும், துணை முதலமைச்சர் வீட்டிலும் அரங்கேறியது.அமைச்சர் ஜெயகுமார், தங்கமணி, ஜே.டி.சி பிரபாகரன், வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனியசாமி ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்து ஆலோசனை சமரசம் செய்தனர்.

இதில் ஒரு முடிவு எட்டப்பட்டதால் நேற்று இரவு முதலே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் தயாராகி விட்டது. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே நடந்த சமரச முயற்சியில் ஒரு முடிவு எட்டப்பட்டு இருப்பதாகவும் இதனால் இன்று முதலமைச்சர் வேட்பாளராக இபிஎஸ் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகின்றது. முதல்வராக இ.பி.எஸ் பெயர் அறிவிக்கப்பட்டாலும் கட்சியை பொறுத்தவரை வழிகாட்டுதல் குழு அமைக்க இரண்டு தலைவர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

11பேர் இடம்பெறும் கட்சி வழிகாட்டுதல் குழுவில் ஓபிஎஸ் தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால், அமைச்சர்கள் இல்லாமல் இருப்பவர்கள் அந்த குழுவில் இடம்பெற வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்துகிறார். அதே போல சமுதாய ரீதியாக, அந்தந்த மதத்தினர், சிறுபான்மையினருக்கும் அந்த 11 பேர் கொண்ட குழுவில் இடம்பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஒரு சமுதாயமும் தப்பாமல், ஒரு மதத்தினரும் விடுபடாமல் 11 பேர் கொண்ட குழுவில் இடம்பெற வேண்டும் என்ற ஓ.பி.எஸ் கோரிக்கை தொண்டர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories

Tech |