Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சீனாவில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை – கொரோனாவை கட்டுப்படுத்தலாம் ….!!

சீனாவில் தொடங்கிய  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை கதி கலங்க வைத்து வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 858,371 பேர் பாதித்துள்ளனர். 177,931  பேர் குணமடைந்த நிலையில் 42,146 பேர் உயிரிழந்துள்ளனர். 638,294 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 32,898  பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

சீனாவில் தொடங்கிய வைரஸ் என்றாலும் சீனாவை விட ஏனைய நாடுகளில் இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த இரண்டு வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற நாடுகளில் பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

தினமும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நேற்று மட்டும் உலகம் முழுமைக்கும் 73,633 பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டுள்ளது. அதே போல நேற்று மட்டும் 4,373 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் ஒரு பாதிப்போ, ஒரு உயிரிழப்பு ஏற்படவில்லை. அப்படியானால் இந்த நிகழ்வு கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும் என்பதை காட்டுகின்றது என்று உலக நாடுகள் பலவும் தெரிவித்துள்ளன.

சீனாவில் மட்டும் கொரோனா தொற்று 81,518 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 76,052 பேர் குணமடைந்து 3,305 பேர் உயிரிழந்துள்ளனர். 2,161  பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 528 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |