Categories
அரசியல் மாநில செய்திகள்

தோனி, ஷாருக் நடிச்சா யாரும் கேட்கல…. கிரிக்கெட்டே சூதாட்டம் தான்…. சரத்குமார் ஆவேசம்….!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைன்ல நிறைய இருக்கு. சரத்குமார் ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வி கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலையே கிடையாது. மோனோகிராஃப் சைட் ப்ளாக் பண்றமா நாம் இதை பிளாக் செய்வதில்லை. ஆன்லைன் ரம்மி இல்லைங்க…  கிரிக்கெட் என்ன பண்றாங்க ?

தோனி வராரு என்ன பண்றாரு ? ஷாருக்கான் வாராரு  என்ன பண்றாரு ?  அது சூதாட்டம் இல்லையா ? அங்க தான் போடுறாங்களே வார்னிங்…  குடிப்பழக்கம் குடியை கெடுக்கும்… புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது.  ரம்மியை பார்த்து விளையாடுங்கள்… தனிநபரான சரத்குமாரை இங்கே நடிக்காத…  அங்க நடிக்காதே என்று சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.

என் கிரெடிட் கார்டுல  லிமிட் 10 லட்சம். ஏதோ நான் சம்பாதிச்சு 10 லட்சம் கிரெடிட் கார்ட்டுல கொடுக்கிறான். நான் ஆன்லைன்ல போய் விளையாடினால்…. 10 லட்சத்துக்கு மேல என்னால விளையாட முடியுமா ? அப்புறம் எப்படி தற்கொலை பண்ணனும் அவன் ? அவர் குடும்ப தகராறில் தற்கொலை பண்ணி இருக்கான்.

செய்தி வருது ரம்மியில் விளையாடி என்று…. எதற்காக கடன் வாங்கினான்னு தெரியாது ? ரம்மி விளையாட கடன் வாங்கினானா ? இல்லை வாழ்க்கையை நடத்துவதற்கு கடன் வாங்கினானா என தெரியாது. அப்போ எல்லாமே இருக்குங்க…  உலகமே விரிஞ்சு கிடக்கு இப்போ…  ஆன்லைன்ல கிரிக்கெட்டும் சூதாட்டம் தான்….  எல்லாமே சூதாட்டம் தான்…  எல்லாரும் அதுல தானே விளையாடுறாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |