Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாரும் வர வேண்டாம்…. போட்டோ எடுத்து அனுப்புங்க…. அரசின் அதிரடி உத்தரவு ….!!

தொழிற்சாலைகளை மின் அளவீட்டை புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக வளாகங்களை குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை முந்தைய மாதத்தை ஒப்பீட்டு செலுத்தலாம் என்று  தெரிவித்துள்ளனர். இதில் வீடுகளில் உள்ள பயனீட்டாளர்களுக்கு செலுத்திய மின்கட்டணம் அதிகமாக இருந்தால் வரக்கூடிய மாதங்களில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல வணிக பயன்பாட்டிற்கு இருக்கக்கூடியர்கள் தற்போது ஊரடங்கால் நிறுவனங்கள் இயங்காமல் அடைக்கப்பட்டுள்ளதால் போன மாத கட்டடனத்தையே கணக்கில் எடுத்து செலுத்த முடியாது என்ற கோரிக்கையை ஏற்று அவர்கள் தங்களின் மின் நுகர்வு விவரத்தை போட்டோ எடுத்து அனுப்பினால் போதும் என்றும், அதனடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |