Categories
மாநில செய்திகள்

இனி யாருமே லஞ்சம் வாங்க முடியாது….. போக்குவரத்து காவலர்களுக்கு புதிய விதிமுறை….. மீறினால் காலி தான்…..!!!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தை உயர்த்தி புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம்  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக அதிக அளவில் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை தவிர காவல் துறையினர் யாராவது லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தற்போது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் வாகன ஓட்டியிடம் மிரட்டியில் லஞ்சம் கேட்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவர்கள் மட்டும்தான் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும், வேறு யாரும் வசூலிக்க கூடாது எனவும், அபராத தொகையை வசூலிக்கும் போது வாகன ஓட்டிகளிடம்  கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் போக்குவரத்து காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை வசூலிக்கும் போது சட்டையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம் முழுமையாக அதை பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |