தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பொது மக்கள் நலன் , பாதுகாப்பு , பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு 144 தடை உத்தரவு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்ட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறினால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பால் , காய்கறி, இறைச்சி, மருந்துகள் கடையை விர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். ஆவின் பால் விற்பனை, அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்படும்
உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் நிலையங்கள், காய்கறி , இறைச்சி , விற்பனை நிலையங்கள் செயல்படும். வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். மருத்துவமனைகள், வங்கி ஏடிஎம் , ரேஷன் கடைகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கும்.
கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள் , ஊடக அலுவலகங்கள் செயல்படும். காய்கறிகள் உணவு பொருள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கிடங்குகள் செயல்பட அனுமதிக்கப்டும். உணவுகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை, உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட தடை விதிப்பு.
டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட அனுமதி இல்லை. பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், மருத்துவ உபகரணம் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதி என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.