Categories
தேசிய செய்திகள்

“இனி பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட கூடாது”…. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சீன நாட்டில் தற்போது உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் 3 பேர் பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்‌ மாண்டவியா ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், பிரதமர் மோடியும் நேற்று டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான எச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி திருமணம், அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக கூட்டங்கள் என பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதோடு சர்வதேச நாடுகளுக்கு பயணம் செய்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றுவதோடு, தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |