உணவு விநியோகம் செய்பவர்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது உணவு விநியோகம் செய்பவர்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சோமொடோ, டன்ஸோ ஆகியவற்றின் மூலம் அவரவர்கள் வீடுகளுக்கே ஆவின் பால் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பால் வினியோகத்தில் ஏதேனும் புகார்கள் ஆலோசனைகள் இருந்தால் 044-23464575, 23464576, 23464578, 18004253300 ஆகிய தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.