Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் இனி வேலை இல்லை…! அமமுகவிற்கு அழைத்த சசிகலா ? சாக்லேட் குறித்து ஜெயக்குமார் கிண்டல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற அடிப்படையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிபியிடம் முதலில் கொடுத்தாச்சு, பிறகு கமிஷனரிடமும் கொடுப்போம். ஹைகோர்ட் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஓபிஎஸ் கட்சியிலே இல்லை, அவர் அடிப்படை உறுப்பினரே கிடையாது. எப்படி அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். ஒரு அடிப்படை உறுப்பினராகவும் இல்லை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு முகமும் கிடையாது, முகாந்திரமும் கிடையாது. அப்படி இருக்கும்போது எந்த விதத்தில் அவர் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வார், அர்த்தம் இல்லை. அது நீதிமன்றத்தினுடைய தீர்ப்பை மதிக்காமல் இருப்பது மாதிரி இருக்கும்.

வைத்தியலிங்கம் சசிகலாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், வெத்தலை பாக்கு கொடுத்த அழைப்பதுண்டு விசேஷத்திற்கு, ஆனால் சாக்லேட் கொடுத்து அமமுகவிற்கு அழைக்கிறார்கள், அதைத்தான் நான் சொல்ல முடியும். என்னுடைய நண்பர் திரு வைத்திலிங்கம் அவர்களுக்கு எங்கள் கட்சியில் வேலை இல்லை. அதனால் அமமுகவிற்கு வாங்க என்று சொல்லிட்டு வரவேற்று சாக்லேட் கொடுத்து கூப்பிடுகிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |