பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்கள் சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் என்பது அவசியம். தேவையானங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பின்னர் அது வந்த பிறகுதான் வெளிநாடுகளுக்கு செல்வார்கள். இந்நிலையில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களில் சமர்ப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை காகித முறையில் டிஜிட்டல் ஆவணங்களாக நாட்டு மக்கள் சமர்ப்பிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.