Categories
தேசிய செய்திகள்

இனி பயமில்லை…! Credit, Debit கார்டு மோசடிகளை தடுக்க….. இன்று(அக்.,1) முதல் புதிய நடைமுறை….!!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும்  பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் டெபிட், கிரெடிட் கார்ட் மோசடிகளை தடுக்கும் வகையில் ‘Tokenization’ என்ற நடைமுறை இன்று(அக்டோபர் 1)முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக RBI அறிவித்துள்ளது. இதன்படி ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது நாம் கொடுக்கும் கிரெடிட், டெபிட் கார்ட் எண்கள் வணிக தளங்களுக்கு தெரியாது. அதற்கு பதில் டோக்கன் எனப்படும் எண்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பரிவர்த்தனை நடைபெறும். இதன்மூலம் நமது கார்ட் தகவல்கள் வெளியில் கசிவது தவிர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |