Categories
தேசிய செய்திகள்

“இனிமேல் இதெல்லாம் சாப்பிட முடியாது”… தடைவிதித்த மாநில அரசு..!!

பறவை காய்ச்சல் காரணமாக கறி மற்றும் முட்டையை வெளி மாநிலத்தில் இருந்து கொண்டுவர சிக்கிம் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வெளி மாநிலங்களில் இருந்து வரும் கோழி இறைச்சி மற்றும் முட்டையை கொண்டுவர சிக்கிம் அரசு தடைவிதித்துள்ளது. பறவைக்காய்ச்சல் சிக்கிம் மாநிலத்துக்குள் நுழையாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில கால்நடை வளர்ப்பு மற்றும் மருத்துவ சேவை துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் இறைச்சி மற்றும் முட்டை போன்ற பொருட்களை கொண்டுவர தடை விதித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் நமது மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக முயற்சியை மேற்கொண்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அமல்படுத்தப்படும் இந்த தடை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |