Categories
தேசிய செய்திகள்

இனி 24 மணி நேரமும்…” மின் வினியோகம்”… 7 நாட்களில் மின் இணைப்பு… புதிய வசதிகள் இதோ..!!

மத்திய எரிசக்தி அமைச்சகம் மின்சார விதிகள் 2020 வெளியிட்டுள்ளது. இது மின் நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளது.

மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து இணை அமைச்சர் ஆர் கே சிங் கூறும்போது: “இந்த விதிமுறைகளின்படி நுகர்வோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே நுகர்வோருக்கு பணி செய்வது. மின்சாரத்தில் நம்பகத்தன்மையான சேவையையும் நுகர்வோர் பெறுவதற்கு இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. அத்துடன் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும். புதிய மின் இணைப்பு, பணம் திருப்பி செலுத்துதல் மற்றும் இதர வேலைகள் வழங்குவதையும் இந்த விதிகள் உறுதி செய்கின்றது.

நாட்டின் மின்சாரத்தை பயன்படுத்துவோரும், எதிர்காலத்தில் உபயோகிக்க உள்ளோரும் ஆக சுமார் 30 ஆயிரம் பேர் இதன் மூலம் பயனடைய உள்ளார்கள். ஊரக மற்றும் கிராமப்புற நுகர்வோர் இடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இணையதளம் வழியாக நுகர்வோர் புதிய மின்சார இணைப்புகளை பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி பெருநகரங்களில் ஏழு நாட்கள், இதர நகரங்களில் 15 நாட்கள் மற்றும் ஊரக பகுதிகளில் 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகள் இணைக்கப்படும்.

இந்த நுகர்வோர் கட்டணம் வெளிப்படை தன்மைக்கு வழிவகுக்கும். அத்துடன் முன்கூட்டியே கட்டணத்தைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளையும் இது உருவாக்குகிறது. மின் வினியோகம் 7 நாட்களும் 24 மணி நேரமும் தொடர்ந்து அளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இணைப்பு துண்டித்தல், மீண்டும் இணைத்தல், மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் செயல்திறன் கண்காணிக்கப்படும். திட்டமிடாத செயலிழப்பு அல்லது தவறு ஏற்பட்டால் மறுசீரமைப்புக்கான மதிப்பிடப்பட்ட நேரத்துடன் எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு இந்த மின்னணு முறையில் உடனடியாக நுகர்வோருக்கு அறிவிப்பு வழங்கப்படும்.

Categories

Tech |