இங்கு பணம் பிரச்சனை இல்லை என்றும் கருவிகள் கிடைப்பதில் தான் சிக்கல் எனவும் கவுதம் கம்பிர் டீவீட்டுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதலிடி கொடுத்துள்ளார். முன்னதாக, கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி-யுமான கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவர் கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், பிஜேபி நிதியை வாங்க டெல்லி அரசாங்கம் வாங்க மறுத்தது. இதனால் டெல்லி முதல்வர் மிகப்பெரிய ஈகோ- வில் இருப்பதாக கம்பிர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ” உங்களது உதவிக்கு நன்றி கௌதம். ஆனால் இங்கு பணம் ஒரு பிரச்னை இல்லை. மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் தான் சிக்கல் உருவாகியுள்ளது. எங்கிருந்தாவது அவற்றை நீங்கள் பெற்று தர உதவினால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும், டெல்லி அரசு அக்கருவிகளை வாங்குவோம்” எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.