1300க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஆத்தூர், கொங்கவள்ளி, ஏற்காடு பகுதியை சேர்ந்த திமுக – விசிக – பாமக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,
எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு கழகத்தின் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் இணைந்ததே சாட்சி. திமுகவின் சதி திட்டங்களை எல்லாம் தவிடு பொடியாக்கியது அதிமுக. மக்களால் நேசிக்கப்பட்ட கட்சி என்பதால் தான் அதிமுக நிலைத்து நிற்கின்றது.
புரட்சித் தலைவருக்கும், புரட்சித் தலைவிக்கும், தொண்டர்கள் தான் வாரிசுகள்; நாம்தான் வாரிசு. நிர்வாகிகளின் உழைப்பும், மக்களின் ஆதரவும் தான் அதிமுக நிலைத்து நிற்க காரணம். மிட்டா மிராசுகளும், தொழிலதிபர்களும் நிறைந்த கட்சி திமுக. ஏழை எளிய தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக என பேசினார்.