இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே ஆடம்பரமான பிரதமர் மாளிகை எனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, ஆடம்பர மாளிகைக்கு நான் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், நாடு முழுக்க தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து புதிதாக பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆடம்பர மாளிகை தயாராகிவிட்டது.
அலரி மாளிகை எனப்படும் பிரதமர் மாளிகையானது, அதிக செலவில் ஆடம்பரமாக இருக்கிறது. இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கே, அந்த மாளிகைக்கு நான் செல்ல மாட்டேன் எனவும், வீட்டிலிருந்து தான் பணியை மேற்கொள்ள போகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது. கொழும்பு நகரத்தில் இருக்கும் என் வீட்டிலிருந்து தான் வேலைகளை செய்ய போகிறேன். மந்திரிகளும் இதேயே பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.