புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை என்றும் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது என தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காலம் வைந்தலூர் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது.
மேலும், ராணுவத்திற்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்று புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் எல்லையில் பறந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பயணித்தவர்களின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் கீழே விழுந்த ஹெலிகாப்டர் கடந்த அரைமணி நிறமாக தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகின.
விபத்து குறித்து தகவல் அளித்ததன் பேரின் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். ஆனால் அங்கு அவ்வாறு எந்த சம்பவமும் நிகழவில்லை எனவும் ஹெலிகாப்டர் நொறுங்கியது வெறும் வதந்தியே என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பு எங்கோ நடத்த விபத்து காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.