தெலுங்கானாவில் மாப்பிள்ளை இல்லாமல் மணப்பெண்ணை மட்டும் வைத்து திருமணம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகம்மது அத்னன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே நமது குடும்பத்தினரால் இவருக்கு திருமணம் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது.
நிச்சயதார்த்தத்திற்கு பின் வேலைக்கு சென்றுவிட்டு திருமண நாளுக்கு மூன்று நாள் முன்பு மீண்டும் நாடு திரும்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார் முகமது.
இந்நிலையில் கொரோனோ நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரால் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பி வர இயலவில்லை. இதனை அவர் போனில் கூற திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம் என நினைத்து வீடியோகால் மூலம் மணமகன் இல்லாமலேயே நிக்கா நடைபெற்றது.