Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது – ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் குழு ஆலோசனை நடத்தி உள்ளது. சிறப்பு குழுவின் ஆலோசனைகள் நாளை முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும். குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுக்க உள்ளார். தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ள நிலையில் புதுக்கோட்டையில் தற்போது வரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Categories

Tech |