வியட்நாமில் கொரோனா தொற்று ஒரு உயிர் பலியை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றது
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி ஏராளமான உயிர் பலியை எடுத்தது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் இன்றுவரை அதிக அளவு உயிர் பலி கொடுத்து திணறி வருகிறது.
இந்நிலையில் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடான வியட்நாமில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 270 மட்டுமே. அதோடு கொரோனா தொற்றுக்கு ஒரு உயிரை கூட அந்நாடு கொடுக்கவில்லை.
நேற்று மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக ஒருவர் கூட தொற்றினால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வியட்நாம் அரசு ஆரம்பத்திலேயே மேற்கொண்ட பயணத்தடை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் என தெரியவருகின்றது.