சனிப்பெயர்ச்சி விழாவில் தரிசனம் செய்ய கொரோனா சான்றிதழ் வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிபெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே சனீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்பதற்கு உடல் வெப்பநிலையை மட்டும் பரிசோதித்தால் போதும், ஒருவேளை உடல் வெப்ப நிலை இருந்தால் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.