கொரோனா தடுப்பு தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு என்பது முழுக்க முழுக்க மருத்துவத்துறை தொடர்பானது என விளக்கம் அளித்துள்ளார். இன்று திருச்சி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை சிறு குறு தொழில் முனைவோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் உரையாற்றிய அவர், ரூ.200 கோடி கடனுதவிக்காக நிதி ஒதுக்கீடு செய்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என தெரிவித்து, இதுவரை 125 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மணப்பாறை வட்டத்தில் சுமார் 1,077 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிற்பூங்கா அமைப்பதற்கான சுற்றுசூழல் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்சாலை தொடங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். மேலும் முக்கொம்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.