Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல, 2இல்ல … நிறைய ஊழல்… வசமாக சிக்கிய ADMK…. ஆதாரத்தோடு எகிறி அடிக்கும் காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் காவிரி குண்டாருக்கு நிதி ஒதுக்கினார்கள். அது என்ன நிலையில் இருக்கிறது ? நதிநீர் இணைப்புக்காக…  கடலில் வீணாக சென்று கலக்கின்ற தண்ணீரை பாதுகாத்து விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த பணம் என்ன ஆச்சு ? ஒதுக்குன பணம் எங்கே ?  எவ்வளவு தூரம் வேலை நடந்து இருக்கிறது ? இதெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

அதனால் சிலதை உங்களிடம் நேரடியாக சொல்ல முடியும், சிலது ஆய்வில் இருக்கிறது, ஆய்வில் இருப்பதை நாம் சொல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் இந்த காண்ட்ராக்டர் உண்மையிலேயே தொழில் செய்தவரா ? இதற்கு இவர் உகந்தவராக ? எதற்கு காலதாமதம் ஆச்சு ?  இந்த திட்டங்களை யார் தீட்டியது ? அந்த திட்டங்களுக்கு நிதி யார் வாங்கியது ?

வாங்கிய நிதியை ஏன் பயன்படுத்தவில்லை ? பயன்படுத்தியதால் எவ்வளவு வட்டி ?  எவ்வளவு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது ? இதெல்லாம் கேட்டு என்ன பதில் சொல்கிறார்கள் என்று அதை சொல்கிறோம். ஏனென்றால் அப்போது தவறு செய்த அதிகாரிகள் இப்போது இருக்க வாய்ப்பு இல்லை. இப்போது இருக்கிற அதிகாரிகள் அப்போது இருந்திருக்க மாட்டார்கள். இது நகராட்சி துறையில் ஊழல் நடந்துள்ளது.

ஒன்று இரண்டு இல்ல. நெறைய ஊழல்கள் இப்படி நடந்திருக்கிறது, நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நாங்களும் சிஏஜிகிட்டயும் கலந்து யோசித்து அரசிடமும் இதெல்லாம் எப்படி கொண்டு போகணும் ? என்று முடிந்தால்…  ஒரு ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் குழுவை அமைத்து,  இதெல்லாம் துரிதமாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |