Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியை NO.1க்கு தூக்கி சென்ற தலைவன்! எதிரணிகளை கதறவிட்டு….. கோப்பைகளை குவித்த வெற்றி நாயகன்….!!

தோனி இந்திய அணிக்காக குவித்த வெற்றிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் தோனி. தோனி வருவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வசம் இருந்த கிரிக்கெட் தோனி வந்தபின்பு இந்தியா பக்கமும் மாறியது. கிரிக்கெட் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் என்று கூறிவந்த நிலையில், பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சரி நிகராக போட்டியிடுவதற்கு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான் என பெருமிதமாக சொல்ல வைத்தவர் தோனி.

அவர் பெற்றுக் கொடுத்த ஒரு சில வெற்றிகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் தோனி. 2007 ஆம் ஆண்டு இந்திய கேப்டனாக பதவி ஏற்றார்.  அதே ஆண்டில் டி20 உலகக் கோப்பை, 2014இல் ஒருநாள் போட்டி உலக கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என பல வெற்றிகளை  பெற்று தந்தவர். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதன் முறையாக தரவரிசையில் முதலிடம் பெற்றதும் தோனியின் தலைமையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |