இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக தொழில் இன்றி வறுமையில் வாடும் இசை கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய இசை கலைஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை எழுப்பப்பட்டது. வடசேரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய குழுவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.