Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சோகமயமான கோவில் திருவிழா…. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது… திருப்பூரில் பரபரப்பு…!!

கோவில் திருவிழாவின்போது பலூன் வியாபாரி வைத்திருந்த நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலை கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 21ஆம் தேதி தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் குழந்தை வேலாயுதசாமி வள்ளி-தெய்வானையுடன் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றதால் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து மாலை 5 மணிக்கு தேர் கிரிவலம் வருதல் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு அந்த கோவிலின் பின்புறத்தில் பல்வேறு வகையான கடைகள் அமைந்திருந்தன. அப்போது திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவர் அவரது கடையில் நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட பலூன்களை விற்பனை செய்துள்ளார். அந்த சமயம் பலூனில் காற்று அடைப்பதற்காக பயன்படுத்தப்படும் நைட்ரஜன் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து விட்டது. இந்த விபத்தில் அந்த பலூன் வியாபாரி நாகராஜனின் இடது கால் துண்டிக்கப்பட்டது.

மேலும் வெடித்து சிதறிய சிலிண்டரின் பாகங்கள் பல்லவராயன் பாளையம் பகுதியில் வசித்து வரும் ஹரி பிரகாஷ் மீதும், சோமனூர் பகுதியில் வசித்து வரும் திருமூர்த்தி என்பவரின் மகளான சம்ரிதா மற்றும் ஹர்ஷிதா போன்றோர் மீதும் விழுந்து விட்டது. அதோடு அருகில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்றவற்றின் மீதும் வெடித்து சிதறிய நைட்ரஜன் சிலிண்டரின் பாகங்கள் விழுந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் அந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு சாமளாபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பலூன் கடைக்காரர் நாகராஜை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். கோவில் திருவிழாவில் நைட்ரஜன் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |