“நித்தம் ஒரு வானம்” திரைப்படமானது நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனரான ஆர் கார்த்திக் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் சிவாத்மிகா ராஜசேகர், ரித்து வர்மா மற்றும் அபர்ணா பால முரளி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வியாகோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை மலையாளத்தில் “ஆகாசம்” என்ற தலைப்பில் உருவாக்கினர். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியானது சென்னையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது, “நித்தம் ஒரு வானம்” என்னுடைய திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் கதையானது மோட்டிவேஷன் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த கதை உணர்த்துகின்றது. மேலும் “ஓ மை கடவுளே” திரைப்படத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை போல் கூடுதலாக இந்த திரைப்படம் ஏற்படுத்தும். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு வித்தியாசமான மற்றும் அதிசயமான அனுபவம் கிடைத்தது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படமானது நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.