இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதம் வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி கீழ்கண்ட செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவும் கொரோனாவின் 2 ஆவது அலை, இந்தியாவில் தான் மிகவும் மோசமாகவுள்ளது. இந்திய பொருளாதாரம் கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் கூடுவதற்கான அறிகுறிகள் இருந்தும், கொரோனாவின் 2 ஆவது அலை பரவலால் முன்னேற முடியாமல் போனது. இருப்பினும் இந்த ஆண்டிக்காக போடப்பட்ட இந்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
எனவே இந்த ஆண்டிற்கான நிதியில் இந்திய பொருளாதாரம் 8.3 சதவீத வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா 2022-2023ஆம் ஆண்டிற்கான நிதியில் 7.5% பொருளாதார வளர்ச்சியை அடையும். அதே போல் இந்தியா 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை 2023-2024 ஆம் நிதியாண்டில் எட்டும் என கருதுகிறோம். இதனையடுத்து உலகப் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5.6% ஆக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.