Categories
தேசிய செய்திகள்

பொது தேர்வு…. யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை…. நிதியமைச்சர் விளக்கம்…!!

கேராளாவில் தேர்வு எழுதிய மாணவர்கள்  யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுதைத் தொடர்ந்து பள்ளி கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தற்போது வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. 10 11 12 உள்ளிட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது.

இதற்கான காரணமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தேர்வை நடத்துவது மாணவர்களின் ஆரோக்கியத்தையும் உடல் நலத்தையும் கேள்விக்குறியாக்குவது போல் உள்ளது என்பதே. ஆனால் கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 14 நாட்களுக்கு முன் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த தேர்வில் கிட்டத்தட்ட  13 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களில் யாருக்கும் இல்லை என கேரளாவில் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேர்வு எழுத வந்த மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முக கவசம் அளிப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை சிறப்பாக கையாண்டதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |