Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு” என் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம்…. 43-வது இடம்…. சாதனை படைத்த மாணவன்….!!

“நீட் தேர்வில்” அகில இந்திய அளவில் 43-வது இடத்தை பிடித்து மாணவர் சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதிலும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரமணி நகரைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர் ராமச்சந்திரன் மகன் அரவிந்த் என்பவர் 710 மதிப்பெண்களை பெற்று 43-வது இடத்தை பிடித்துள்ளார். இதனை அறிந்த அரவிந்த் மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக மாணவர் அரவிந்த் கூறியதாவது “நான் தனியாக பயிற்சி வகுப்பு எதிலும் படிக்கவில்லை.

ஆனால் 11-ஆம் வகுப்பு முதல் பள்ளியில் பயிலும்போது நீட் தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் மற்றும் கையேடுகளை வாங்கி அதனை தொடர்ந்து படித்து வந்தேன். இதனையடுத்து மன அழுத்தமின்றி படித்ததுதான் எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மேலும் பெற்றோர், ஆசிரியர்கள் என யாரும் நான் குறைவான மதிப்பெண் எடுத்தபோதும் என்னை எதுவும் பேசியது கிடையாது. இதனால் எந்த ஒரு மன அழுத்தமும் எனக்கு ஏற்படவில்லை. என்னை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்பதே என் பெற்றோரின் எண்ணமாக இருந்தது. அதன்படி இந்த தேர்விற்கான அடிப்படை கல்வியை பள்ளியில் பயிலும்போதே படித்தேன்.

அதுமட்டுமின்றி நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வில் அதிகளவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அடிக்கடி தேர்வு எழுதியதுதான் எனது வெற்றிக்கு முதல் காரணமாக இருக்கிறது. ஆகவே 2 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றோர் ஒத்துழைப்பால் இந்நிலையை என்னால் அடைய முடிந்தது. இதற்கிடையில் தற்போது அகில இந்திய அளவிலான இடம் மட்டுமே தெரிந்துள்ளது. எனவே தமிழக அளவில் தெரிய வேண்டும் என்றால் முழு விவரமும் தெரியவேண்டும். அப்படி தெரியவந்தால் தமிழக அளவில் அதிக மதிப்பெண் பெற்றவனாக நான் இருப்பேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |