நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகை ஆவார். இவர் பிரபல நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் விக்ரம் தமிழில் சிங்கம் , என்னை அறிந்தால், லிங்கா மற்றும் பாகுபலி 2 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார். இதில் அனுஷ்கா காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நான்கு இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் குற்ற கிளர்ச்சி படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடப் போகின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 31-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தயாரிப்பாளர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ‘நிசப்தம்’ படம் பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரும்பத் திரும்ப நிசப்தம் படம் வெளியீட்டு தேதி தள்ளிப் போனதால் படம் விரைவில் வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.