நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு கொடுக்கக் கூடாது என்று பொறியாளர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் சிலபேர் முறைகேடாக கட்டுமானங்களை கட்டி வருகின்றனர். அதற்கு அந்த பகுதிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் முறைகேடாக மின் இணைப்பை பெறுகின்றனர். இந்நிலையில் நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க மின்வாரியம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறியாளர்களை மின்வாரியம் எச்சரித்துள்ளது.
அதுமட்டுமின்றி மாவட்ட கலெக்டர்கள் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நீர்நிலைப் பகுதிகளின் பட்டியலை பெற வேண்டும். இதனையடுத்து அந்த பகுதிகளில் புதிய மின் இணைப்பு வழங்க கூடாது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பரிசோதனை செய்வதற்காக செங்கல்பட்டு, சிட்லப்பாக்கம் ஏரியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு மேற்கொள்ளுமாறு பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.