Categories
தேசிய செய்திகள்

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடியிலான ‘தன்னிறைவு இந்தியா’ திட்டம் உருவாக்கபட்டுள்ளதாகவும், சுய சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் 5 முக்கிய தூண்களாக பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள் உள்ளது என தகவல் அளித்துள்ளார்.

மேலும் உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும் என்றும் மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார். ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாகவும், பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அரசு உணர்ந்துள்ளது என்று கூறிய அவர், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.52000 கோடி செலுத்தப்பட்டுள்ளது, நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு தானியம் விநியோகப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |