Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீங்களாக முன்வந்தால் நல்லது” வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ…!!

கிரிக்கெட் வீரர்கள் வயது முறைகேட்டில் தங்கள் குற்றங்களை தாமாக முன்வந்து ஒப்புக் கொள்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

தங்கள் குற்றத்தை தாமே முன்வந்து ஒப்புக்கொள்ளும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். 18 வயதிற்கு உட்பட்டோர் 23 வயதிற்கு உட்பட்டோர் சீனியர் அணி என பல பிரிவுகளில் இந்தியாவில் தேசிய அளவிலான கிரிக்கெட் அணிகள் உள்ளன. அதேபோல் மாநில அளவிலும் அணிகள் உள்ளது. ஒரு சில வீரர்கள் வயது விஷயத்தில் முறைகேடாக அணியில் இடம் பிடித்து விளையாடுவார்கள். பின்பு அவர்களின் குறை  கண்டுபிடிக்கும் போது அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும் அவருக்கு பதிலாக இடம் பிடிக்க வேண்டிய மற்றொரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையும் பாழாகிவிடும்.

இளைஞர் அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் முறைகேட்டில் ஈடுபடும் வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றமும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்திருதது. இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி வயது முறைகேட்டில் ஈடுபட்ட வீரர்கள் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு சான்றிதழ்களை திருத்தம் செய்தால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். இல்லையென்றால் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படும். பிறகு மாநில அணிக்கும் தேசிய அணிக்கும் விளையாட முடியாது என தெரிவித்துள்ளார். ஆனால் குடியேற்றம் குறித்த முறைகேட்டிற்கு பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |