ஆர்சிபி அணி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தை , பற்றி முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த சீசன் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டி வந்த, ஆர்சிபி அணி தற்போது நடைபெற்ற 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் , ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது. இதுவரை கோப்பையை கைப்பற்றாத ஆர்சிபி அணி ,இந்த சீசனில் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப் போட்டிகளில் பேட்டிங்கில் ஆர்சிபி அணி சொதப்பி உள்ளது. இதுபற்றி முன்னாள் இந்திய வீரனான சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி ,முதல் வீரராக களம் இறங்குவதை விட்டு ,3வது இடத்தில் விளையாட வேண்டும். அதோடு தேவ்தத் படிக்களுடன் ,முகமது அசாருதீனை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும். இவ்வாறு தொடக்க வீரர்களாக இருவரையும் களமிறங்கினால், மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல், விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிப்பார்கள் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியில் தற்போது விளையாடி வரும் ராஜத் படிதார், இதுவரை விளையாடிய போட்டிகளில் 71 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவருக்கு பதில் இளம் வீரரான முகமது அசாருதீன் களமிறங்கினால் நன்றாக இருக்கும், என்று சேவா ஆலோசனை வழங்கியுள்ளார்.