நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நடந்த பயங்கர சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நைஜீரியா நாட்டில் உள்ள நைஜரில் பாரே என்ற மத்திய நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் சம்பவத்தன்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த நைஜரில் பாரே கிராமத்திற்கு மோட்டார் பைக்குகளில் துப்பாக்கி ஏந்திய படி வந்த மர்ம நபர்கள் சிலர் நேரடியாக மசூதிக்குள் நுழைந்துள்ளனர்.
அதன் பிறகு கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.