Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதை அமைக்க கூடாது…. நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும்…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்….!!

குலவிளக்கு கிராமத்தில் சாயப்பட்டறை அமைக்க கூடாது என்று பொதுமக்கள் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ. பிரேமலதாவிடம் குரங்கள் ஓடை பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் நடராஜ், செயலாளர் குமரவேல், நிர்வாகிகளுடன் வந்து குலவிளக்கு கிராம மக்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது குலவிளக்கு கிராமம் முற்றிலும் விளைநிலம் கொண்ட பூமியாக இருக்கின்றது. அங்கு சிலர் விளைநிலத்தில் மின் இணைப்பு பெற்று சாயப்பட்டறை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே நபர் கதிரம்பட்டி பகுதியில் சாயப்பட்டறை அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதால் அந்த கிராமத்தினர் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பட்டறையின் மின் இணைப்பை துண்டித்து அதற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். அதன்பின் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை குத்தகைக்கு எடுத்து இயக்கிவரும் அந்த நபர்கள் குலவிளக்கு விளைநிலத்தில் சாயப்பட்டறை அமைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த சாயப்பட்டறை அமைக்கப்பட்டால் விளைநிலங்கள், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும். மேலும் அருகில் உள்ள குரங்கள் ஓடையில் சாயக்கழிவை வெளியேற்றவும் வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே எங்கள் கிராமத்தில் விவசாய விளை நிலத்தில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று கிராம மக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |