Categories
சினிமா தமிழ் சினிமா

நிலைமை சரியில்லை…! காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்..!!

மாஸ்டர் படம் குறித்து சீக்கிரமே ரசிகர்களுக்கு அப்டேட் தருவோம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

விஜய் நடித்த பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆவார். வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும்  நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் என பலரும் நடித்துள்ளார்கள். இப்படம் இந்த மாதம் 9-ம் தேதி வெளியிடுவதாக திட்டமிட பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனாவின் ஊரடங்கு காரணமாக மாஸ்டர் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. ஊரடங்கால் அனைத்து திரையரங்குகளும்  மூடப்பட்டிருக்கிறது. அப்படியே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் செயல்பாட்டிற்கு வருவதற்கு குறைந்தபட்சம் 2 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது தியேட்டருக்கு வரும் என விஜய் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  சமூக வலைத்தளம், இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு ஒன்றை தொடங்கியிருக்கிறார். அந்த கணக்கில் இருந்து அவர் ரசிகர்களுடன் உரையாடுகிறார்.

அப்பொழுது அவர் கூறியதாவது;

மாஸ்டர் ஒரு ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாகும். விஜய், விஜய் சேதுபதி இருவரின் ஆக்ஷனும் மிக அதிகளவில் இருக்கிறது. தற்போதைய நிலைமை எதுவும் சரியில்லாததால் இப்படத்தின் டிரைலர் பற்றியும், வெளியாகும் தேதி பற்றியும், சொல்வதற்கு இது சரியான நேரம் இல்லை.  அதனால் தான் நாங்கள் எவ்விதமான அப்டேட்டையும் கொடுக்காமல் இருக்கிறோம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். விரைவில் மாஸ்டர் படம் சம்மந்தமாக அப்டேட்களைத் தருவோம்.

https://www.instagram.com/p/B_biMpXgO3h/

Categories

Tech |