Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவில் தூக்கம் வரமாட்டேங்குதா… அப்ப இத ட்ரை பண்ணுங்க..!!

இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்கள் தூக்கம் நன்றாக வரும்.

அனைவருக்கும் இரவில் ஒரு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஆழ்ந்த தூக்கத்தில் உடல் திசுக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. தூக்கத்தின்போது இதயம் மற்றும் இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கின்றன. இது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தூக்கமின்மை இருதய நோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது. உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். அல்ல தூக்கம் பெறுவதில் சிக்கல் இருந்தால் சில வீட்டு வைத்தியங்கள் இரவில் செய்யலாம்.

எண்ணெய் மசாஜ்:

தேங்காய் எண்ணெயை தலை மற்றும் கால்களில் தடவி மசாஜ் செய்வது நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. இந்த எண்ணெயுடன் மசாஜ் செய்வது நரம்பு மண்டலத்திற்கு நிவாரணம் அளிக்கிறது.

சரியான நேரத்தில் தூங்குவது:

நல்ல தூக்கத்திற்கு சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்வது அவசியம். நீங்கள் சரியான நேரத்தில் தூங்க முயற்சிக்கவில்லை என்றால், தூக்கமின்மை பிரச்சினை மேலும் அதிகரிக்கக்கூடும்.

சூடான பால்:

பாலில் டிரிப்டோபான் உள்ளது, இது தூக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. சூடான பால் தினமும் உட்கொள்வது நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. ஒரு கப் சூடான பாலில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் கலந்து படுக்கைக்கு முன் குடிப்பது சிறந்த தீர்வினை அளிக்கிறது.

ஜாதிக்காய்:

சூடான பால் நன்மை பயக்கும், அதனுடன் கலந்த ஜாதிக்காய் பொடியை நீங்கள் குடித்தால், தூக்கமின்மை பிரச்சினையும் நீங்கும். படுக்கைக்கு முன், ஜாதிக்காய் தூள் கலந்த ஒரு கப் சூடான பால் குடிக்கவும். விரும்பினால், பழச்சாறுகளில் ஜாதிக்காயை கலந்து தூங்குவதற்கு முன் குடிக்கலாம்.

குங்குமப்பூ:

ஒரு கப் சூடான பாலில் இரண்டு சிட்டிகை குங்குமப்பூ கலந்து கலந்து குடிக்கவும். குங்குமப்பூ நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பயனளிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது.

சீரகம்:

ஆயுர்வேத மருத்துவத்தின் படி, சீரகம் தூக்கத்திற்கு நன்மை பயக்கும். சீரக தேநீர் படுக்கைக்கு முன் நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ஒரு ஸ்பூன் சீரகப் பொடி மற்றும் ஒரு வாழைப்பழத்தை பாலில் பிசைந்து ஒரு கலவையை உருவாக்கி, இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதை சாப்பிடுங்கள். இதில் இருக்கும் மெலடோனின் ஒரு ஹார்மோன் ஆகும், இது தூங்க உதவுகிறது.

Categories

Tech |