நைஜீரிய நாட்டின் தேவாலயத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோது உயிர் தப்பியவர்களை கொல்வதற்கு வெளிப்பகுதியிலும் தீவிரவாதிகள் நின்றதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நைஜீரிய நாட்டின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 50 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கி சூடு தாக்குதலை நேரில் பார்த்த ஒரு நபர் தெரிவித்ததாவது, தேவாலயத்தின் வாசலிலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள்.
அந்த ஆலயத்திற்கு மூன்று நுழைவு வாயில்கள் இருக்கின்றன. அதில் பெரிய நுழைவு வாசல் அடைக்கப்பட்டிருந்தது. எனவே, மக்கள் வெளியேறுவது சிரமமாக இருந்தது என்று கூறியிருக்கிறார். தேவாலய தாக்குதலில் உயிர் தப்பி வெளியில் வரும் மக்களையும் துப்பாக்கியால் சுடுவதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு காத்திருந்தனர் என்று தேவாலயத்தின் ஊழியர்களும் தாக்குதலை நேரில் பார்த்த மக்களும் வேதனையுடன் கூறியிருக்கிறார்கள்.