Categories
உலக செய்திகள்

23 நாட்கள்…. “அடைத்து வைத்து பலாத்காரம்”… சொந்த கழிவை மிரட்டி சாப்பிட வைத்த கொடூரன்… அதிர வைத்த சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி ஒரு பெண்ணை தொடர்ந்து 23 நாட்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய ஒருவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருகிறான் 34 வயதான நிக்கோலஸ் ஜான் கிரில்லி ( Nicholas John Crilley) என்பவன். இவன் 22 வயதான பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றி தனது குடியிருப்பிலும், ஹோட்டல் ஒன்றிலும் அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளான். சட்டக் காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண்ணை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் குற்றம் சாட்டப்பட்ட அந்த கொடூரன்  கொடுமைப்படுத்தியுள்ளான்.

ஒரு கட்டத்தில் சாவின் விளிம்பு  வரை சென்ற அந்தப் பெண் எங்கே இறந்து விடுவாளோ என்று பயந்து போய் கொலைக் குற்றத்திற்கு பயந்து, உடனே அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கொடுத்துவிட்டு அந்த கொடூரன் மாயமாகியுள்ளான்.கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்தில், 8 நாட்கள் போலீசாரின் கடுமையான போராட்டத்திற்கு பின்னரே பதுங்கியிருந்த  கிரில்லி கைது செய்யப்பட்டுள்ளான்.

Queensland man Nicholas John Crilley (pictured) is facing sentencing for the brutal torture of a woman. Right, a police investigation is conducted around his offending in Brisbane.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்த கொடூரன் பிடியில் சிக்கிய அந்த பெண் அந்த 23 நாட்களில் தினமும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லை, அவரது உடல் மீது நெருப்பு வைத்து அணு அணுவாக ரசித்துள்ளான் அந்த கொடூரன். மேலும் தூக்கத்தில் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றியதாகவும் அவன்  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான்.

இதைவிட மிகவும் கொடுமை என்னவென்றால், அந்த அரக்கன் தனது (பெண்ணின்) சொந்த கழிவுகளை சாப்பிட வைத்ததாகவும், எப்படி சாகவேண்டும் என்ற முறையை தேர்வு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அவன் தெரிவித்துள்ளான். சம்பவம் நடந்த அன்று தகவல் அறிந்த உடனே கிரில்லியின் குடியிருப்புக்கு விரைந்து சென்ற மருத்துவ உதவிக் குழுவினர் முதலில், அந்தப் பெண் இறந்து விட்டதாகவே நினைத்துள்ளனர்.

ஆம், அந்த பெண்ணின் உடம்பில் பல எலும்புகள் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் தோல் சிதைந்து, அவரது முகத்தில் ஆழமான காயங்கள் மற்றும் அவரின்  உடலில் 46% தீக்காயங்களும் இருந்துள்ளன. சரியான நேரத்தில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சையளிப்பதற்கு அனுமதிக்க தவறியிருந்தால், அவர் இறந்திருக்க நேரிடலாம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்..

இந்த கொடூர அரக்கன் மீது தற்போது 54 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்குகள்  நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம். ஆனால் இத்தகைய கொடூரனையெல்லாம் கொல்ல வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கொந்தளிக்கின்றனர்..

Categories

Tech |