Categories
தேசிய செய்திகள்

நிச்சயமான பெண்ணை கொன்று புதைத்து…. தலைமறைவான காதல் ஜோடி…. திடுகிட வைக்கும் பின்னணி…!!!

ஆந்திர மாநிலம் சித்தம்பூட்டைச் சேர்ந்த கொரபுலெட்சுமி (20) என்பர் வசித்து வருகிறார். இவரும் சம்பங்கிப்புட்டைச் சேர்ந்த வண்டலம் கோபால் (21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேதலா நாராயணம்மா என்பவரது இளைய மகள் சேதல காந்தம்மா (21) என்பவருக்கும் கோபாலுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயக்கப்பட்டது. அதன்பிறகு கோபால், லட்சுமி காதல் விவகாரத்தை அறிந்த நாராயணம்மா, லட்சுமியை சந்திக்க கூடாது என்று கோபாலை கட்டுக்குள் வைத்தார். மேலும் காந்தம்மாவுடன் கோபாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்த லட்சுமி, காதலன் கோபாலை தொடர்பு கொண்டு ‘என் சாவுக்கு காரணம் நீதான் என கூறி கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்வேன்’ என மிரட்டினார். அதனால் பயந்து போன கோபால் கந்தம்மாவை திருமணம் செய்யும் முடிவை கைவிட்டார். இதனையடுத்து கோபால் மற்றும் லட்சுமி இருவரும் தங்கள் காதலைத் தொடர வேண்டும் என்றால் காந்தம்மாவை கொலை செய்ய முடிவு செய்தனர். மேலும் கோவிலில் நடக்கும் விநாயகர் திருவிழாவில் பெரும்பாலானோர் பங்கேற்பார்கள், மிகக் குறைவானவர்களே வீட்டில் தங்குவார்கள் என்பதால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளில் காந்தம்மாவை முடிக்க திட்டம் தீட்டினார்கள்.

இந்நிலையில் அன்று லட்சுமி, காந்தம்மாவின் வீட்டிற்குச் சென்றார். கோபாலுடனான நிச்சயதார்த்தத்திற்கு காந்தம்மாவை வாழ்த்தினார். அதன் பின்னர், காந்தம்மாவை தன் வீட்டிற்குச் செல்ல கூடவரச் சொன்னார்.  இருவரும் சித்தம்பூட்டில் உள்ள லட்சுமியின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு லட்சுமி மற்றும் கோபால் ஆகியோர் சேர்ந்து காந்தம்மாவை கோடரியால் அடித்தும் கழுத்தை நெரித்து கொன்றனர். தொடர்ந்துலட்சுமியின் வீட்டின் அருகே உடலை புதைத்தனர். இதனையடுத்து காந்தாம்மா மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கோபால் மற்றும் லட்சுமியின் காதல் குறித்து நாராயணம்மா சந்தேகம் தெரிவித்தார். கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தின் போது, ​​காந்தம்மா காணாமல் போனது குறித்து கோபாலும், லட்சுமியும் வெவ்வேறு விதமான கருத்துகளை கூறினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை அறிந்த கோபால்,லட்சுமி இருவரும் அங்கிருந்து தலை மறைவானார்கள். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தங்கி அங்குள்ள ஆலையில் பணிபுரிந்தனர். ஒரு வருடத்திற்கு பிறகு நேற்று போலீசார் அங்கு சென்று கோபால், லட்சுமி இருவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |