Categories
மாநில செய்திகள்

நெய்வேலி – கடலங்குடி இடையே புதிய மின்பாதை செயலாக்கத்திற்கு வரப்பட்டுள்ளது – மின்சார வாரியம்!

டெல்டா பகுதிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

நெய்வேலி – கடலங்குடி இடையே புதிய மின்பாதை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெய்வேலி – கடலங்குடி இடையே 77.31 கி.மீ நீள 230 கி.வோ புதிய மின்பாதை செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.100.82 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்பாதை பயன்பாட்டிற்கு வந்தவுடன் டெல்டா மாவட்டங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏதுவாகும். விவசாயம் முழுமையாக நடைபெறும் தற்போதைய காலகட்டத்தில் இது விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |